இராக்கில் இரட்டை தற்கொலை குண்டு தாக்குதல்

இராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹூசைனின் சொந்த நகரான திக்ரித் மற்றும் சமாராவில் நிகழ்ந்துள்ள இரட்டை தற்கொலை குண்டு தாக்குதல்களில் குறைந்தது பதினோரு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Image caption சமாராவில் ஷியா புனிதப் பயணிகளை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்

தலைநகர் பாக்தாத்தின் வடக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திக்ரித் நகரத்தின் தெற்கு நுழைவாயிலில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினரும், மருத்துவமனை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

சமாராவில் ஷியா புனிதப் பயணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளின் வலுவிடமாக விளங்குகின்ற மொசூல் நகரில் இருந்து, அவர்களை விரட்ட இராக் அரசு கடந்த மூன்று வாரங்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது,

தொடர்புடைய தலைப்புகள்