ஹாங்காங்கில் சீனாவின் தலையீட்டை எதிர்த்து பேரணி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹாங்காங் நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் ஏடுக்க சுதந்திர ஹாங்காங் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முயன்றும் முடியாமல் போயிற்று

ஹாங்காங்கின் அரசியல் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாட்டை எதிர்த்து அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஹாங்காங் நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் ஏற்பது ஒரு வண்ணமயமான நடைமுறை. எதிர்ப்பை காட்டும் ஒரு வாய்ப்பும் கூட. ஆனால் உறுதிமொழி வார்த்தைகளை மாற்றுவது சிக்கலை ஏற்படுத்தும்

உள்ளூர் நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்ட இரண்டு ஹாங்காங் உறுப்பினர்கள், பதவியேற்க அனுமதிப்பது தொடர்பில், சீன அரசு ஆணையிடுவதை ஹாங்ஹாங் மக்கள் விரும்பவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுதந்திரத்திற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பதாக சீன ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டாரி லீ கருத்து தெரிவித்திருக்கிறார்

சீனாவிடம் இருந்து ஹாங்ஹாங் பிரிந்து, தனி சுதந்திர நாடாக வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் இவர்கள் இருவரும், சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சீனாவை அவமதித்திருப்பதற்கு யாவ் மற்றும் லியுங் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீன ஆதரவு போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்

இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சினம் கொண்டுள்ள சீனா, திங்கள்கிழமைக்குள் அவர்களின் நிலை பற்றி முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது.

தொடர்புடைய தலைப்புகள்