இராக்கில் 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீவைத்த ஐ.எஸ் அமைப்பினர்

இராக் நகரான மொசூலின் தெற்கு திசையில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து பின்வாங்கிய இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள், 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எரிந்துக் கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளிலிருந்து வரும் மாசு, அங்குள்ள கால்நடைகளை கறுப்பாக்கியுள்ளது

அங்குள்ள மக்கள் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் மற்றும் விலங்குகள் பலியாகியுள்ளன என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிந்துக் கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளிலிருந்து வரும் மாசு, அங்குள்ள கால்நடைகளை கறுப்பாக்கியுள்ளது.

மொசூலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் 6 எண்ணெய் கிணறுகளை ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்; ஐ.எஸ் போராளிகள் அவைகளுக்கும் தீ வைக்க கூடுமோ என அஞ்சப்படுகிறது.

சமீப நாட்களில், ஜிகாதி அமைப்பிடமிருந்து மொசூல் நகரை திரும்பக் கைப்பற்றும் தாக்குதலில் இராக் அரசப்படைகள் சில வெற்றிகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்