இந்திய செல்வந்த வர்த்தகர்களுக்கு புதிய விசா ஏற்பாடு - பிரிட்டிஷ் பிரதமர்

இந்தியாவிலிருந்து பிரிட்டனிற்கு வர்த்தக ரீதியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கான புதிய பாஸ்போர்ட் மற்றும் விசா ஏற்பாடுகளை இந்திய பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மேஅறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

டில்லி வந்துள்ள மே, வணிக தலைவர்களுடன் உரையாற்றிய போது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையில் உள்ள வர்த்தக உறவை ஆழப்படுத்துவது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

மே அறிவித்துள்ள இந்த சமீபத்திய நடவடிக்கைகள், குறிப்பிட்ட பணக்கார இந்தியர்கள் குழுவை இந்தியா நியமனம் செய்ய அனுமதிக்கிறது. மேலும் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரிட்டனின் விசா மற்றும் குடிவரவு சேவைகளை பெற தனிப்பட்ட உதவிகள் வழங்கப்படும்.

தெரீசா மேயின் அந்த அறிவிப்பு இந்தியாவிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான தற்போதைய குடியேற்றக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு இந்திய அதிகாரிகளால் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணமாக அமையவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்