பெருவில் பூர்வீக மயக்க மருந்து பானத்தை அருந்திய அமெரிக்க பெண் பலி

அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், பெரு பிராந்தியத்தில் இருக்கும் கூஸ்கோவில், பூர்வீக மக்களால் மத காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் "அயஹுவாஸ்கா" என்று அழைக்கப்படும் மயக்கமூட்டும் பானத்தை அருந்தியபின் உயிரிழந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption "அயஹுவாஸ்கா" என்று அழைக்கப்படும் மயக்கமூட்டும் பானத்திற்கு ஆன்மீக மற்றும் சிகிச்சை முறை பண்புகள் இரண்டுமே உள்ளன என்று கருதப்படுகிறது.

பிரிட்டன் குடிமகன் ஒருவருக்கு சொந்தமான ஓய்வு விடுதி ஒன்றில், அந்த 41 வயது பெண் இறந்து கிடந்தார். ஓய்வு விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமேசானின் அடர்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய அரியவகை திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் அந்த அயஹுவாஸ்காவைப் பயன்படுத்தி, சுற்றுலாத் துறை அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

அந்த பானத்திற்கு ஆன்மீக மற்றும் சிகிச்சை முறை பண்புகள் இரண்டுமே உள்ளன என்று கருதப்படுகிறது.

ஆனால் அந்த பானம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், தங்களின் பாரம்பரியம் அழிக்கப்படுகிறது என்றும் பூர்வீக குடிமக்கள் அச்சம் கொள்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்