சைப்ரஸ் தீவை ஒன்றாக்குகின்ற அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை

சைப்ரஸ் தீவை ஒன்றாக்குகின்ற நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை விரைவில் எட்டவிருக்கும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை பொது செயலாளர் பான் கி-மூன் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

கிரேக்க சைப்ரஸ் தலைவர் நீகோஸ் அனாஸ்தாஸ்சியாதிஸூக்கும், துருக்கிய சைப்ரஸ் தலைவர் மூஸ்தஃபா அகென்ஜாவுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் பேசியபோது பான் கி-மூன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இந்த இரண்டு தொகுதிகளும் சற்று தளர்வாக பெடரல் அமைப்பாக, பெரும்பாலும் தன்னாட்சி மாநிலங்களாக செயல்படும் நிலையை உருவாக்குவதை, நோக்கமாக கொண்டு, எல்லை சீரமைப்பில் தொடர்கின்ற பிரச்சனையை பற்றி இந்த இரு தலைவர்களும் கலந்தாய்வு நடத்துகின்றனர்.

1974ல் கிரீஸால் உந்தப்பட்டு, கிரிஸோடு இணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நட்த்தப்பட்ட அதிரடி ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் துருக்கிய படைகள் சைப்ரஸ் தீவின் வடபகுதியை ஆக்ரமித்தபோதிலிருந்து சைப்ரஸ் தீவு இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்