கடைசி பிரசார நாளில் முக்கிய மாநிலங்களை இலக்கு வைத்து ட்ரம்ப், ஹிலரி பிரசாரம்

ஒரு கசப்பான மோதல் பிரசாரத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலின் கடைசி பிரசார நாளில் டொனால்ட் ட்ரம்பும், ஹிலரியும் தங்களது பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

ஹிலரி மிச்சிகனிலும், ட்ரம்ப் ஃப்லோரிடாவிலும் என ஒவ்வொருவரும் முக்கிய மாநிலங்களை இலக்கு வைத்து தங்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப், அமெரிக்காவின் தில்லுமுல்லு மிக்க அமைப்பு தனக்கு எதிராக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மீண்டும் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடைசியாக ஆய்வு செய்யப்பட்ட மின்னஞ்சல் தொகுதியில், ஹிலரி குற்றம் புரிந்ததற்கான எந்தவொரு சான்றுகளையும் காணவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மத்திய புலனாய்வு துறை அறிவித்த பிறகு, அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

வாக்களிக்க ஆர்வமின்றி இருக்கும் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு போய் வாக்களிப்பதற்கு அறிவுறுத்துவதே ஹிலரி கிளிண்டனுக்கு பெரிய சவாலாக இருப்பதாக வாஷிங்டனிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.