என்.டி.டி.வி விவகாரம்: மத்திய அரசின் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான, என்.டி.டிவி, வரும் புதன்கிழமையன்று மத்திய அரசு விதித்துள்ள 24 மணி நேர ஒளிப்பரப்பு தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மத்திய அரசின் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் என்.டி.டி.வி மனு

கடந்த ஜனவரி மாதம் விமான தளம் ஒன்றில் நடந்த மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட போது, அதனுடன் சேர்ந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வெளியிட்டதற்காக என்.டி.டி.வி ஹிந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தப்போவதாக தொலைத்தொடர்ப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த தடை உத்தரவானது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், மற்ற செய்தி நிறுவனங்களும் இதே தகவல்களைத்தான் செய்தியாக வெளிட்டதாகவும் என்.டி.டி.வி கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தன்னிச்சையான தண்டனை என்று மூத்த ஆசிரியர்களின் அமைப்பு ஒன்று அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்