மொசூல் அருகே அமைந்துள்ள நகருக்குள் நுழைந்தவிட்ட குர்தீஷ் படைகள்

வட இராக்கில் உள்ள குர்தீஷ் படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் அருகே அமைந்துள்ள நகருக்குள் நுழைந்தவிட்ட குர்தீஷ் படைகள்

மொசூல் நகரின் அருகே அமைந்துள்ள பஷிகா நகரின் வீதிகளில் சண்டை நடந்து வருகிறது.

பீரங்கித் தாக்குதலுடன் குர்தீஷ் படையினரின் தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது.

பின், அதனைத் தொடர்ந்து, கவச வாகனங்களிலும் நடந்தும் படையினர் உள்ளே சென்றனர்.

எனினும், தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், குறைந்தது இரு கார் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதல்களை தொடுத்தனர்.

மொசூல் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான ராணுவ நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்