மோசடி அமெரிக்க கட்டமைப்புகள் ஹிலரியை பாதுகாக்கின்றன: ட்ரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசடி அமெரிக்க கட்டமைப்புகள் ஹிலரியை பாதுகாக்கின்றன: ட்ரம்ப்

நீண்ட அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல்கள் மீண்டும் தலைப்புச் செய்திகளாகியிருக்கின்றன.

ஆனால் இந்த முறை எஃப்பிஐ அவரை விடுவித்திருக்கிறது.

அவர் மின்னஞ்சல்கள் மீதான புதிய புலனாய்வில், அவர்மீது குற்றச்சாட்டுக்களை பதியக்கூடிய ஆதாரம் எதையும் காணவில்லை என்று அது அறிவித்துள்ளது.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் இதை ஏற்கவில்லை.

ஹிலரி கிளிண்டன் குற்றவாளி என்றும் வாக்குச்சீட்டில் அமெரிக்கர்கள் நீதி வழங்கவேண்டும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருக்கிறார்.