தலை வெட்டப்பட்ட சுமார் 100 உடல்களின் புதைகுழி கண்டுபிடிப்பு - இராக் ராணுவம்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளிடம் இருந்து ராணுவம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைப்பற்றிய ஒரு நகரத்தில், தலை வெட்டப்பட்ட நிலையில் சுமார் 100 உடல்களின் புதைகுழி ஒன்றை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்திருக்கிறது,

படத்தின் காப்புரிமை Reuters

மொசூல் நகரின் தெற்கில் அமைந்திருக்கும் ஹமாம் அல்-அலில் நகரில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஐ.எஸ். தீவிரவாதிகள் செய்திருக்கும் மிக கொடிய குற்றத்திற்கு இது சான்று என்று ராணுவம் கூறியிருக்கிறது.

ஆனால், இந்த புதைகுழி கண்டுபிடிப்பு பற்றிய வேறு தகவல்கள் இல்லை.

அந்த உடல்கள் திறந்தவெளியில் கிடந்ததா அல்லது இனிதான் தோண்டி எடுத்து மொத்த எண்ணிக்கையை எடுக்க வேண்டியுள்ளதா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

முறையான தடவியல் புலனாய்வு இனிமேல் தான் நடத்த வேண்டியுள்ளது

தொடர்புடைய தலைப்புகள்