துபாய் - அபுதாபி பயணத்தை 12 நிமிடங்களில் சாத்தியமாக்கும் கட்டமைப்பை உருவாக்க ஒப்பந்தம்

துபாயிலிருந்து அருகாமையில் உள்ள அபுதாபிக்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரமாக உள்ள பயணத்தை 12 நிமிடங்களாக குறைக்கும் ஒலி வேகத்தை விட துரிதமான (சூப்பர்சோனிக்) போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது தொடர்பாக மதிப்பீடு செய்யும் ஓர் ஒப்பந்தத்தில் அமெரிக்க நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்ய துபாய் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சூப்பர்சோனிக் அமைப்பு சோதனை ( கோப்புப் படம்)

முன்னதாக , இந்த ஆண்டின் தொடக்கத்தில், மணிக்கு 1100 கிலோ மீட்டருக்கும் வேகமாக செல்லக்கூடிய அழுத்தம் குறைக்கப்பட்ட குழாய்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட விமான எரிபொருள் அகற்ற கொள்கலன் உந்துவதற்கு தேவையான அமைப்பை பயன்படுத்தி, லாஸ் வேகாஸ் பாலைவனப் பகுதிக்கு வெளியே ஹைப்பர்லூப் ஒன் என்ற இந்த அமெரிக்க நிறுவனம் ஒரு முதல் பொது சோதனையை மேற்கொண்டது.