மேகன் மார்க்லே எனது பெண் தோழிதான்: இளவரசர் ஹேரி ஒப்புதல்

பிரிட்டனின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் பேரனான இளவரசர் ஹேரி அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லே தனது பெண் தோழிதான் என்று உறுதி செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption இளவரசர் ஹேரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே

ஊடகங்களினால் தனது பெண் தோழி தொடர் துஷ்பிரயோகங்கள் மற்றும் தொந்தரவுகளை சந்தித்ததாகவும், ஊடகங்கள் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரமான மேகன் மார்க்லேயின் பாதுகாப்பு குறித்து தான் கவலை அடைந்துள்ளதாகவும், தன்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்ற ஏமாற்றம் தனக்குள்ளதாகவும், வழக்கத்திற்கு மாறாக கடுமை மிகுந்த சொற்கள் நிரம்பிய தனது அறிக்கையில் ஹேரி தெரிவித்திருந்தார்.

இளவரசர் ஹேரி மற்றும் மேகன் மார்க்லே ஆகிய இருவரின் உறவு குறி்தது கடந்த சில வாரங்களாக ஊடகங்கல் தீவிரமாக செய்தி வெளியிட்டு வந்தன. இதன் மூலம் ஊடகங்கள் எல்லை மீறிவிட்டதாக ஹேரி சாடியுள்ளார்.