முடிவடையும் தருவாயில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான ஃபுளோரிடா, பென்சில்வேனியா மற்றும் ஒஹையோ ஆகியவை உள்ளிட்ட பெரும்பான்மையான அமெரிக்காவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

படத்தின் காப்புரிமை Reuters

கென்டக்கி, இந்தியானா மற்றும் மேற்கு வர்ஜீனியா போன்ற மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப்பும், வெர்மாண்ட் மாநிலத்தில் ஹிலரி க்ளிண்டனும் வெற்றி பெறுவார்கள் என்று ஏபிசி என்ற அமெரிக்க தொலைக்காட்சி சேனல் கணித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு அதிகமாக இருந்துள்ளது.

கணினி கோளாறால் ஏற்பட்ட பிரச்சனைகளால், வடக்கு கரோலினாவின் சில பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவே அமையும்.

இது வரை அமெரிக்க அதிபராக எந்த பெண்ணும் பதவி வகிக்கவில்லை.

மேலும், அமெரிக்க அரசியல் பதவிகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியிருக்காத மற்றும் அந்நாட்டின் ராணுவத்தில் பணியாற்றியிருக்காத யாரும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்