முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான ஃ புளோரிடாவில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று ஏபி செய்தி நிறுவனம் கணித்துள்ளது.

Image caption முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்

இந்த மாநிலத்தில் உள்ள 29 தேர்தல் அவை வாக்குகள் முக்கிய அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இருவரின் வெற்றிக்கும் மிகவும் முக்கியமானதாக அமைய உள்ளது. ஹிலரி மற்றும் டிரம்ப் ஆகிய இரு வேட்பாளர்களுக்கும் தெளிவான ஆதரவில்லாமல் ஊசலாட்ட நிலை காணப்படும் இந்த மாநிலத்தில், கடந்த 2008, 2012 அதிபர் தேர்தல்களில் ஒபாமா வெற்றி பெற்றார்.

ஆனால், 2000-ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஃ புளோரிடா மாநிலத்தில் வெறும் 537 வாக்குகளில் ஜார்ஜ் டபுள்யூ. புஷ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மேற்கு கரை மாநிலமான ஓரெகனில் ஹிலரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று ஏபிசி செய்தி முகமை கணித்துள்ளது.

அதே வேளையில், வடக்கு கரோலினா மாநிலத்தில் டொனால்ட் டிரம்பின் வெற்றியை இந்த செய்தி முகமை கணித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்