அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் அவைகளை தக்கவைத்துள்ள குடியரசுக் கட்சி

அமெரிக்க அதிபர் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்ட செனட் மற்றும் பிரதிநிதிகள் அவைத் தேர்தல்களில் ஆகிய இரண்டையும் குடியரசுக் கட்சி மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அமெரிக்க செனட் ( கோப்புப் படம்)

இது வரை குடியரசு கட்சி வகித்து வந்த ஒரு செனட் அவை உறுப்பினர் பதவியை மட்டுமே ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செனட் மற்றும் பிரதிநிதிகள் அவைகளை மீண்டும் தக்கவைத்துள்ள குடியரசுக் கட்சி

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது கட்சியின் நியமனத்தை பெறும் போட்டியில் டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்த ஃபுளோரிடாவை சேர்ந்த மார்கோ ரூபியோ மற்றும் ஒஹையோ மாநிலத்தை சேர்ந்த ராப் போர்ட்மென் ஆகிய இரு முக்கிய குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் மீண்டும் செனட் உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மார்கோ ரூபியோ

செனட் சபையின் தற்போதைய சபாநாயகரான பால் ரயன் தனது விஸ்கான்ஸின் செனட் இடத்தை மீண்டும் தக்கவைத்துள்ளார்.

செனட் அவையில் குடியரசு கட்சியின் நிலை குறித்து மேலும் படிக்க: அமெரிக்க செனட் தேர்தல் முடிவுகள்: மீண்டும் வெற்றி பெறுமா குடியரசுக் கட்சி?

சட்டங்களை இயற்ற அடுத்த அமெரிக்க அதிபருக்குள்ள திறன் மீது அமெரிக்க செனட் தேர்தலில் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொடர்புடைய தலைப்புகள்