அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் பாடுபடுவேன்: டிரம்ப் வெற்றியுரை

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அனைத்து அமெரிக்க மக்களின் நலனுக்காகவும் பணிபுரியப் போவதாகவும், நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடும் போட்டி மற்றும் பலதரப்பட்ட பிரசாரத்திற்கு பிறகு தனது போட்டியாளர் ஹிலரியை வீழ்த்தியுள்ள டொனால்ட் டிரம்ப், ஹிலரி கடுமையாகப் பிரசாரம் செய்தார் என்று சுட்டிக்காட்டினார். இந்த நாட்டுக்காக அவர் உழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். லட்சக்கணக்கான உழைக்கும் குடிமக்கள் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களித்திருப்பதாகவும், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தனது முழுத் திறனை உணரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அமெரிக்காவுடன் நல்லுறவை மேற்கொள்ள விரும்பும் நாடுகளை சரியான முறையில் அணுகப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வியாழனன்று அதிகார மாற்றம் குறித்து விவாதிக்க டிரம்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் அதிபர் ஒபாமா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தனது குடும்பத்தினருடன்

உடைந்து கொண்டிருக்கும் நாட்டின் உள்கட்டமைப்பை சீர் செய்வது மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவதும் தான் தனது முதல் கடமை என்று டிரம்ப் தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.

அதிபர் வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி பெற்ற நாளிலிருந்து, வெள்ளை மாளிகையில் அதிபராக பதவியேற்கும் காலம் வரை கண்காணிக்கும் மேற்பார்வைக் குழுவை கிறிஸ் கிறிஸ்டீ முன்னடத்துவார். இவர் நியூஜெர்சியின் குடியரசுக் கட்சி ஆளுநர்.

மேலும் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்வார் டிரம்ப்.

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பால் ரேயன் மற்றும் மெக்கொனல் ஆகிய இருவருமே டிரம்பிற்கு ஆதரவாக உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

நிறுவப்பட்ட ஆணைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் குறித்து, குறிப்பாக ஐரோப்பாவில் கவலை தெரிவித்திருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருடன் இணைந்து பணிபுரிவதாக உறுதியளித்திருக்கின்றனர்.

பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந், டிரம்பின் வெற்றி நிலையற்ற தன்மையில் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல், பகிரப்பட்ட ஜனநாயக கொள்கைகளை பொறுத்தே இருநாடுகளுக்கு மத்தியிலான நெருங்கிய ஒத்துழைப்பு அமையும் என தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எச்சரிக்கையுடன் ஏங்கலா மெர்கல்

மேலும் உலகளவில் டிரம்பிற்கு இருக்கும் பொறுப்புகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞாயிறன்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களுக்கு மத்தியில் சிறப்பு கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

ரஷிய அதிபர் புதின், இரு நாடுகளுக்கும் மத்தியில் ஏற்படும். நல்லுறவு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் ரஷியா - அமெரிக்க நாடுகளின் நன்மைக்கு வித்திடும் என தெரிவித்துள்ளார்.

நேட்டோ , சிரியாவில் நடைபெறும் போர் மற்றும் யுக்ரைனில் ரஷியாவின் தலையீடு ஆகியவைக் குறித்து ஒபாமாவின் நிர்வாகத்தில் பதற்றநிலை இருந்து வந்த போதிலும் அவைகளில் தளர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார்.

டிரம்பிற்கு தனது வாழ்த்துக்களை அனுப்பிய சீன அதிபர் ஷீ ஜிங் பிங், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருடன் இணைந்து பணிபுரியும் நேரத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருநாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமாதான போக்கை கடைபிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, சீனா அந்நிய செலாவணி சந்தையில் தலையிடுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

சீன இறக்குமதிகளுக்கு வரி விதிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்