ஆண்கள் டிரம்புக்கு பேராதரவு: பெண்கள், இளையோர் ஹிலரியின் பக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக் கொடி நாட்டிய நிலையில், அவரது வெற்றிக்குக் காரணம் பெண்களா, ஆண்களா, முதியவர்களா, எந்த இனத்தவர் யார் பக்கம் நின்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம்தான் உங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது.

ஆண்களில் பெரும்பான்மையானவர்கள் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், பெண்கள் ஆதரவில் பெரும்பங்கு ஹிலரிக்குத்தான்.

முதியவர்களில் பெரும்பான்மையானோர் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், இளையோர் ஆதரவு ஹலரிக்குத்தான்

ஆசிய இனத்தவர், கறுப்பினத்தவர்களின் ஏகோபித்த ஆதரவு ஹிலரிக்குத்தான். இருந்தாலும், வெள்ளையினத்தவர்களின் பெரும்பான்மை ஆதரவு டிரம்பின் பக்கம் சென்றுவிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்