புகைப்படங்களில் 2016 அமெரிக்க தேர்தல் நாள்

2016 நவம்பர் 9 ஆம் நாள் வெற்றிக்கு பின்னர் ஏற்புரை வழங்கிய அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நியூயார்க்கில் நடைபெற்ற வெற்றிப் பேரணியின் போது மேடையில் பேசிய, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தங்களுடைய வெற்றிக்கு வெளியுறவு அமைச்சர் ஹிலரி, சற்று முன்னர்தான் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகக் கூறினார்.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் படத்தின் காப்புரிமை John Locher / AP
Image caption நியூயார்க்கில் நடைபெற்ற வெற்றிப் பேரணியின் போது மேடையில் பேசிய, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தங்களுடைய வெற்றிக்கு வெளியுறவு அமைச்சர் ஹிலரி, சற்று முன்னர்தான் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகக் கூறினார்
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் படத்தின் காப்புரிமை Shawn Thew / EPA
Image caption ஓஹியோ மாநிலத்தை டிரம்ப் வென்றது அவருக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்தது. இந்த மாநிலத்தை வெல்லாமல் எந்த குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும் வெள்ளை மாளிகை சென்றதில்லை.
வாக்கு எண்ணப்படும்போது ஆதரவாளர்கள் கவலை படத்தின் காப்புரிமை Drew Angerer / Getty Images
Image caption அந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், பலர் கண்ணீரில் கலங்கினார்கள். முடிவு தங்களுக்கு எதிராக அமைந்துவிட்டதை அறிந்தபோது, ஜனநாயக அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனின் ஆதரவாளர்களால் தோல்வியைத் தாங்க முடியவில்லை.
ஒரு பெண் அழுகிறார் படத்தின் காப்புரிமை Frank Franklin II / AP
Image caption கலிஃபோர்னியா, நியூ யார்க், ஓரேகான், நியூ ஜெர்ஸி, கனெக்டிகட் , மசாச்சூசெட்ஸ் , மேரிலாண்ட் , வெர்மோண்ட், டெலவேர், இல்லினாய்ஸ், ரோட் ஐலண்ட், ஹவாய், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா மாவட்டம், நியூ மெக்ஸிகோ, கொலராடோவில் ஹிலரி வென்றிருக்கிறார்.
100 மில்லியனுக்கு மேலான வாக்காளர்கள், தங்களது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்திருக்கின்றனர். படத்தின் காப்புரிமை Laura Segall / AFP
Image caption 100 மில்லியனுக்கு மேலான வாக்காளர்கள், தங்களது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்திருக்கின்றனர்.
இந்நாளின் தொடக்கத்தில் நியூ யார்க்கில் சாப்பாகுவா என்ற இடத்தில் வைத்து, முன்னாள் அமெரிக்க அதிபரும், கணவருமான பில் கிளிண்டனுடன், ஹிலரி ஆதரவாளர்களை வாழ்த்தினார். துவக்கத்தில், ஹிலரி முன்னிலையில் இருந்தபோது, அவர் எளிதில் வென்றுவிடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். படத்தின் காப்புரிமை Justin Sullivan / Getty Images
Image caption இந்நாளின் தொடக்கத்தில் நியூ யார்க்கில் சாப்பாகுவா என்ற இடத்தில் வைத்து, முன்னாள் அமெரிக்க அதிபரும், கணவருமான பில் கிளிண்டனுடன், ஹிலரி ஆதரவாளர்களை வாழ்த்தினார். துவக்கத்தில், ஹிலரி முன்னிலையில் இருந்தபோது, அவர் எளிதில் வென்றுவிடுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
டிரம்ப், மெலானி டிரம்ப் படத்தின் காப்புரிமை Evan Vucci / AP
Image caption டிரம்பும் அவரது மனைவியும் நியூயார்க்கில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இரு அதிபர் வேட்பாளர்களும் போட்டி கடுமையாக உள்ள முக்கிய மாநிலங்களில் திங்கள்கிழமை உச்சகட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். வட கரோலையான, பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் பேரணிகள் நடத்தி வாக்கு சேகரித்தனர்.
கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சலிஸில், வாக்களிக்கும் தாய்க்காக காத்திருக்கும் பெண் படத்தின் காப்புரிமை Mike Nelson / EPA
Image caption கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சலிஸில், வாக்களிக்கும் தாய்க்காக காத்திருக்கும் குழந்தை
எல் சால்வடாரில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய 91 வயதான ஃபேபியோ அல்வரடோ படத்தின் காப்புரிமை Mario Anzuoni / Reuters
Image caption எல் சால்வடாரில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய 91 வயதான ஃபேபியோ அல்வரடோ, தேர்தல் நாளில்தான் அமெரிக்க பிரஜை என்ற தகுதியைப் பெற்றார். அவர், 80 வயதான தனது மனைவி மார்த்தாவுடன் கலிஃபோர்னியாவின் நோர்வாக்கில் உள்ள மையத்தில் வாக்களிக்க வந்தார்.
பென் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் டிரம்புக்கு வாக்களிக்க வாக்காளர்களை தூண்டும் உற்சாகமான நபர் ஒருவர். படத்தின் காப்புரிமை Jeff Swensen / Getty Images
Image caption பென் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் டிரம்புக்கு வாக்களிக்க வாக்காளர்களை தூண்டும் உற்சாகமான நபர் ஒருவர்.
ஹிலரியின் முகமூடி அணிந்து அவரது ஆதரவை விளம்பரப்படுத்தும் ஹிலரி கிளிண்டன் ஆதரவாளர் ஜோர்ஜ் மன்டெஸ் படத்தின் காப்புரிமை Ralph Freso / Getty Images
Image caption ஹிலரியின் முகமூடி அணிந்து அவரது ஆதரவை விளம்பரப்படுத்தும் ஹிலரி கிளிண்டன் ஆதரவாளர் ஜோர்ஜ் மன்டெஸ்
காங்கிரஸூக்காக வாக்களிக்கும் அமெரிக்கர்கள். மக்களவை இருக்கைகள் அனைத்திற்கும், செனட் அவையில் நான்கில் மூன்று பங்கு இருக்கைகளுக்கும் உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்.. படத்தின் காப்புரிமை Randall Hill / Reuters
Image caption காங்கிரஸூக்காக வாக்களிக்கும் அமெரிக்கர்கள். மக்களவை இருக்கைகள் அனைத்திற்கும், செனட் அவையில் நான்கில் மூன்று பங்கு இருக்கைகளுக்கும் உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்.
மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும், வாஷிங்டன் டி.சி.யிலும் ஆறு வேறுபட்ட நேர மண்டலங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. படத்தின் காப்புரிமை Shelby Lum/Richmond Times-Dispatch via AP
Image caption மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும், வாஷிங்டன் டி.சி.யிலும் ஆறு வேறுபட்ட நேர மண்டலங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
கன்சாஸில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர் படத்தின் காப்புரிமை Larry W Smith / EPA
Image caption 1968 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும் குடியரசு கட்சியினரால் வெல்லப்படும் கன்சாஸில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர்
வாக்களித்த வாக்காளர் படத்தின் காப்புரிமை Charles Mostoller / Reuters
Image caption தபால் மூலமும், வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் வரலாற்று பதிவாக 46 மில்லியன் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர்
இந்த இரு அதிபர் வேட்பாளர்களிடம் இருந்த பகைமை சில வாக்காளரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் காப்புரிமை Austin Anthony / Daily News via AP
Image caption இந்த இரு அதிபர் வேட்பாளர்களிடம் இருந்த பகைமை சில வாக்காளரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
செய்தியாளர்கள் படத்தின் காப்புரிமை Mary Altaffer / AP
Image caption வாக்குப்பதிவுகள் முடிவடையும் முன்னரே நியூ யாக்கில் இரவு நடத்தப்படும் டிரம்பின் தேர்தல் நாள் இரவு பேரணிக்கு செய்தியாளர்கள் கூடத் தொடங்கிவிட்டனர்.
நகரில், குடியரசுக் கட்சியின் பேரணிக்காக ஜேக்கப் கே. ஜாவிட்ஸ் மாநாட்டு மையத்தில் இறுதி ஏற்பாடுகள் நடைபெற்றன. படத்தின் காப்புரிமை AFP
Image caption நகரில், குடியரசுக் கட்சியின் பேரணிக்காக ஜேக்கப் கே. ஜாவிட்ஸ் மாநாட்டு மையத்தில் இறுதி ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த தேர்தல் உற்சாகம் அமெரிக்காவில் மட்டும் காணப்பட்டதல்ல. நெதர்லாந்தில் அதிபர் வேட்பாளர்களின் படங்களுடன் புகைப்படங்களக்கு போஸ் கொடுத்த மக்கள் படத்தின் காப்புரிமை Bart Maat / EPA
Image caption இந்த தேர்தல் உற்சாகம் அமெரிக்காவில் மட்டும் காணப்பட்டதல்ல. நெதர்லாந்தில் அதிபர் வேட்பாளர்களின் படங்களுடன் புகைப்படங்களக்கு போஸ் கொடுத்த மக்கள்
தொடக்க முடிவுகள் வந்த நிலையில், இந்தியானாபோலிஸில் நடைபெற்ற பேரணியில் தங்கள் ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவை காட்டும் வகையில் கூடிய மக்கள். படத்தின் காப்புரிமை Michael Conroy / AP
Image caption தொடக்க முடிவுகள் வந்த நிலையில், இந்தியானாபோலிஸில் நடைபெற்ற பேரணியில் தங்கள் ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவை காட்டும் வகையில் கூடிய மக்கள்.
ஹிலரி கிளிண்டன் ஆதரவாளர்கள் அந்தச் சூழ்நிலையை ரசித்து மகிழ்ந்தார்கள். அப்போது எல்லாமே அவர்களுக்கு நன்றாகத்தான் இருந்தது. படத்தின் காப்புரிமை Justin Lane / EPA
Image caption ஹிலரி கிளிண்டன் ஆதரவாளர்கள் அந்தச் சூழ்நிலையை ரசித்து மகிழ்ந்தார்கள். அப்போது எல்லாமே அவர்களுக்கு நன்றாகத்தான் இருந்தது.
அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப் தனது குடும்பத்தினருடன் கவனித்துக் கொண்டிருப்பதை, அவரது மகன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். படத்தின் காப்புரிமை Donald Trump Jr/Instagram/PA
Image caption அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப் தனது குடும்பத்தினருடன் கவனித்துக் கொண்டிருப்பதை, அவரது மகன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
போட்டி கடுமையாக இருந்த முக்கிய மாநிலங்களில் ஒன்று ஃபுளோரிடா. இறுதியில் டிரம்ப் வென்றார். படத்தின் காப்புரிமை Mark Wallheiser / Getty Images
Image caption போட்டி கடுமையாக இருந்த முக்கிய மாநிலங்களில் ஒன்று ஃபுளோரிடா. இறுதியில் டிரம்ப் வென்றார்.
நியூ யார்க்கிலுள்ள ராக்ஃபெல்லர் மையத்தில் தேர்தல் செய்திகளைப் பார்க்க குவிந்த மக்கள் படத்தின் காப்புரிமை Julio Cortez / AP
Image caption நியூ யார்க்கிலுள்ள ராக்ஃபெல்லர் மையத்தில் தேர்தல் செய்திகளைப் பார்க்க குவிந்த மக்கள்
புரூக்ளின் பேரஃபிலில் முடிவைத் தெரிந்துகொள்ள கூடிய ஹிலரி கிளிண்டன் ஆதரவாளர்கள். படத்தின் காப்புரிமை Saul Martinez / Reuters
Image caption புரூக்ளின் பேரஃபிலில் முடிவைத் தெரிந்துகொள்ள கூடிய ஹிலரி கிளிண்டன் ஆதரவாளர்கள்.
டிரம்ப் பேரணியில், தங்களுடைய அதிபர் வேட்பாளர் தேர்தல் முடிவுகளில் முன்னிலை வகிப்பதை ஆர்வமுடன் பார்க்கும் ஆதரவாளர்கள். படத்தின் காப்புரிமை Chip Somodevilla / Getty Images
Image caption டிரம்ப் பேரணியில், தங்களுடைய அதிபர் வேட்பாளர் தேர்தல் முடிவுகளில் முன்னிலை வகிப்பதை ஆர்வமுடன் பார்க்கும் ஆதரவாளர்கள்.
அதேநேரம் ஹிலரி கிளிண்டன் பேரணியில் மக்களின் முகத்தில் சோகம் கவ்வியது. படத்தின் காப்புரிமை Carlos Barria / Reuters
Image caption அதேநேரம் ஹிலரி கிளிண்டன் பேரணியில் மக்களின் முகத்தில் சோகம் கவ்வியது.

All photographs are copyrighted.