சாரண இயக்கத்தினருக்கு மன நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு: ஆய்வில் தகவல்

சாரண சாரணிய இயக்கத்தினருக்கு வாழ்க்கையின் பிந்தைய கட்டத்தில் மன நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் (கோப்புப் படம்)

1958 ல் பிரிட்டனில் பிறந்த சுமார் பத்தாயிரம் மக்களிடம் அவர்கள் வாழ்நாள் முழுதும் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது.

சாரண சாரணிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பதற்றம் மட்டும் மனநிலை ஊசலாட்டம் ஆகியவற்றிலிருந்து பாதிக்கப்படுவது 15 சதவீதம் குறைவு என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் போன்ற பிற நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு அதே பலன் இல்லை என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சுயசார்பு மற்றும் கூட்டாக பணிபுரிதல் ஆகியவைகளை வளர்த்தெடுக்க , வெளிப்புற நடவடிக்கைகளுக்கு சாரண இயக்கம் முக்கியத்துவம் கொடுப்பதே இதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.