ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பழைய அலைபேசிகள் சேகரிப்பு

ஜப்பானின் 2020 ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள், விலைமதிப்பற்ற உலோகங்களை வெட்டி எடுக்கபழைய அலைபேசிகளை சேகரிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வழங்கக்கூடிய தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களில் அந்த வெட்டி எடுக்கப்பட்ட உலோகங்கள் பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு வருடமும் ஜப்பானிய வாடிக்கையாளர்கள், ஏறக்குறைய 650 டன் மின்னணு பொருட்களை பயனற்றது என்று தூக்கி எறிகிறார்கள்.

அவற்றில் மிகச் சிறிய அளவிவே எதிர்கால பயன்பாட்டிற்காக மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்