அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த ரஷ்யா விருப்பம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக ரஷ்யா மீண்டும் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் மரியா சகரவா, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை தற்போது கூற இயலாது என்றும் ஆனால் , அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பின் குழுவினருடன் ரஷ்யா தொடர்பில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இது வழக்கமான ஒரு நடைமுறை என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலரி இது போன்ற சந்திப்புகளுக்கான வேண்டுகோள்களுக்கு மறுப்பு தெரிவித்தார் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தனது தேர்தல் பிரசாரங்களில் ரஷ்ய அதிபர் புதினை பாராட்டிப் பேசியுள்ள டிரம்ப், கிரைமியாவின் இணைப்பை அங்கீகரிப்பது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் தான் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்ததாக குறிப்புணர்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்