அதிகார மாற்றம் குறித்து ஒபாமாவைச் சந்திக்கிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிகார மாற்றங்கள் குறித்து பராக் ஒபாமாவுடன் விவாதிக்க, வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

படத்தின் காப்புரிமை other

அவருடன் செல்லும் அவர் மனைவி மெலானியா நாட்டின் முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமாவை சந்திக்கவுள்ளார்.

ஒபாமா மற்றும் டிரம்பிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ள போதிலும், ஜனவரியில் ஏற்படவிருக்கும் குடியரசுக் கட்சியினரின் நிர்வாகத்திற்கு வெற்றிகரமான ஓர் அதிகார மாற்றம் நிகழ, தனது அணியினரை முடிந்தவரை கடினமாக உழைக்க வேண்டும் என்று ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக தனது நெருங்கிய ஆலோசகர்களை சந்தித்து, பதவியேற்கும் முதல் நூறு நாட்களில் செய்ய வேண்டியது குறித்தும், மேலும் தனது அமைச்சரவை நியமனங்கள் குறித்தும் விவாதித்தார் என டிரம்பின் பிரசார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.