டிரம்ப் அதிபராவதற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டாவது நாளும் போராட்டம்

படத்தின் காப்புரிமை FP/getty

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிறகு இரண்டாவது இரவிலும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. ஆனால், மக்கள் கூட்டம் குறைவாக இருந்துள்ளது.

படத்தின் காப்புரிமை European Press Agency
Image caption ஒபாமா உருவாக்கி இருக்கும் பலவற்றை மாற்றுவதற்கு டிரம்ப் எண்ணம்

லாஸ் ஏஞ்சலஸில் போக்குவரத்தை பாதிக்க செய்து, உடமைகளை சேதப்படுத்திய சிறிய அளவிலான மக்கள் கூட்டத்தை மேயர் எரிக் கிராசியேத்தி கண்டித்திருக்கிறார்.

ஆனால், ஜனநாயகத்தின் அழகான வெளிப்பாடு என்று அவர் கூறியிருப்பதற்கு பல போராட்டக்காரர்களை அவர் புகழ்திருக்கிறார்,

முன்னதாக, டிரம்ப் அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

படத்தின் காப்புரிமை White House
Image caption மெலானியா டிரம்ப் மற்றும் மிஷல் ஒபாமா உரையாடல்

தேர்தல் பிரசாரத்தின்போது இருந்த தொனிக்கு மாறாக, ஒபாமாவை நல்லதொரு மனிதர் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

அவர்களின் சுமுக தொனி ஒரு புறமிருக்க, இதுவரை இல்லாத அளவில் அதிக அமெரிக்கர்களுக்கு மருத்துவ காப்பீட்டை விரிவாக்கிய ஒபாமாகேர் திட்டம் உள்பட, ஒபாமா உருவாக்கி இருக்கும் பலவற்றை மாற்றும் நோக்கத்தை டிரம்ப் கொண்டிருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்