டிரம்ப் அதிபராவதற்கு எதிராக பல நகரங்களில் போராட்டம்

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை AP
Image caption போராட்டம் வன்முறையாக மாறிய போர்ட்லாண்டில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

பரவலான குற்ற நடத்தைகள் மற்றும் வன்முறைகள் காணப்படும் ஒரு கலவரத்தை தாங்கள் சமாளித்து வருவதாக ஓரேகான் மாநிலத்திலுள்ள போர்ட்லாண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மின்னியாபோலிஸில் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் காவல்துறையினர்

அதிகாரிகளை நோக்கி பொருட்களை எறிந்ததாலும், கார் சன்னல்களை உடைத்ததாலும், போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சலஸ், பிலடெல்பியா, டென்வர் மற்றும் மின்னியாபோலிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மின்னியாபோலிஸில் நெடுஞ்சாலையை தடுத்து போராட்டம்

இந்த போராட்டங்களின்போது, டிரம்பை குறிப்பிட்டு "என்னுடைய அதிபர் அல்ல" என்று அவர்கள் முழங்கியுள்ளனர்.

முன்னதாக, இந்த போராட்டங்கள் நியாயமற்றவை என்று கூறிய டிரம்ப், அவை ஊடகங்களால் தூண்டப்படுவதாக கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption Demonstrations were also held in smaller cities such as Eugene in Oregon ஓரேகானின் யூஜீன் போன்ற சிறிய நகரங்களிலும் போராட்டங்கள்

வியாழக்கிழமை, டிரம்ப் அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது இருந்த தொனிக்கு மாறாக, ஒபாமாவை நல்லதொரு மனிதர் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.