மேத்யூ சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஹேய்ட்டிக்கு அதிக உதவி வேண்டும்: அதிபர் வேண்டுகோள்

ஹேய்ட்டியை மேத்யூ சூறாவளி சூறையாடி ஒரு மாத காலம் ஆன நிலையில், மேலும் உதவிகள் வேண்டி ஹேய்ட்டியின் இடைக்கால அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் ஜோசெலெர்மி பிரிவெர்ட்

மேத்யூ சூறாவளி சுமார் 2 பில்லியன் டாலர் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், நாட்டின் மொத்த பட்ஜெட்டைவிட இது அதிகம் என்றும் பிபிசியிடம் ஜோசெலெர்மி பிரிவெர்ட் தெரிவித்துள்ளார்.

மேத்யூ சூறாவளி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முகாம்களிலில் தங்கியுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற இணங்க வைப்பதும், நடவுக்கு தயார் நிலையில் உள்ள அவர்களுடைய நிலங்களுக்கு திருப்பி அனுப்புவதே முதன்மையான பணி என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு உணவு தட்டுபாட்டை தவிர்க்க, விதைகள் மற்றும் உரங்கள் வாங்குவதற்கு சுமார் 30 மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை 45 மில்லியன் டாலர்கள் உதவி தருவதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் பெரும்பான்மையான உதவியை வழங்கியிருக்கிறது.

அதில், பெரும் பங்கு அமெரிக்கா கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்