பிரேசிலில், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய நிறுவனங்கள் 350 மில்லியன் டாலர் செலுத்த உத்தரவு

பிரேசிலில், சமார்க்கோ சுரங்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்கள், முதல் கட்டமாக, 350 மில்லியன் டாலர்களை, பிரேசில் நாட்டின் மிக மோசமான சுற்றுச் சூழல் பேரழிவு என்று குறிப்பிடப்படும் சம்பவத்தால் ஏற்பட்ட மாசுபட்ட இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகளுக்கான நிதியை செலுத்த வேண்டும் என்று பிரேசில் நாட்டின் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த நவம்பர் மாதம், மில்லியன் கணக்கான கியூபிக் மீட்டர் மாசுபட்ட தண்ணீர் மற்றும் மண் கலந்த கழிவு, இரும்பு தாது சுரங்கத்தில் இருந்த அணையின் உடைப்பு வழியாக வெள்ளமாக சென்று சேர்ந்தது. இதில், குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.

முதல் கட்டமாக, பி எச்.பி. பில்லிட்டன்(BHP Billiton) மற்றும் பிரேசில் நாட்டு நிறுவனம் வேல்(Vale), ஆகிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய இந்தப் பணம் ஆயத்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

சமார்க்கோ சுரங்கத்தில் இருந்து வெளியேறிய மீதமுள்ள கழிவுகளை, தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களை அடுத்த ஆறு மாதத்தில், அவர்கள் முன்வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.