அலெப்போவில், சிரியா போராளிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன - ரஷியா

முற்றுகையிடப்பட்ட, அலெப்போ நகரத்தில், சிரியா தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் மேற்கு அலெப்போவில் வெடிக்காத வெடிமருந்துகளை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அவற்றில் குளோரின் இருந்ததற்கான அடையாளம் தெரியவந்துள்ளதாக ஜெனரல் ஈகோர் குன்ஹஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் பிடியில் உள்ள நகரத்தின் பகுதிகளில் வாயு குண்டுகளை வீசியதாக சிரியா அரசு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது .

சிரியா அரசாங்கம் 2015ல் கிராமங்களில் நடத்திய மூன்று தாக்குதல்களில் குளோரின் வாயுவை பயன்படுத்தியாக சர்வதேச இரசாயன ஆயுத புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்த போது அந்த முடிவுகளைக் கடந்த மாதம் ரஷியா மறுத்திருந்தது.