தன்னை எதிர்த்த போராட்டக்காரர்களை ஆதரித்து பேசிய டிரம்ப்

அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அவரது வெற்றிக்கு எதிராக , போராட்டக்காரர்கள் அவரை கடுமையாக தாக்கிப் பேசிய சில மணி நேரங்களில், டிரம்ப் அவர்களை நாட்டின் மீது உணர்ச்சி மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் என்று விவரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் மற்றும் பெருமைப்பட வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பல முக்கிய நகரங்களில் அவருக்கு எதிராக வலுத்த போராட்டங்கள் மிக நியாயமற்ற, தொழில்முறை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டங்கள் என்று குறிப்பிட்டார்.

ஒரகன் பகுதியில் உள்ள போர்ட்லேண்ட் போலிசார் கண்ணீர் புகை குண்டுகள் மட்டும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இவர்கள் கல் மற்றும் பிற பொருட்களை வீசிய பெருங்குழப்பவாதிகள் என்று கூறிய போலிசார் மற்றும் அவர்கள் கார்கள் மற்றும் கடைகளை தாக்கினர் என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டங்கள் லாஸ் ஏஞ்சலீஸ், ஃபிலடெல்பியா, டென்வர், மற்றும் மினியாப்புலிஸ் போன்ற மற்ற நகரங்களிலும் நடந்தன.