பருவநிலை மாற்றத்தை எதிர்த்து சீனா தொடர்ந்து போராடும் என உறுதி

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பிறகு பருவநிலை மாற்ற விவகாரத்தை அமெரிக்கா எப்படி அணுகினாலும், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக சீனா போராடும் என்று உறுதியளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சீனா நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் என்று மொராக்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீன தூதுக்குழுவின் ஒர் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் சீனா நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் என்று மொராக்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீன தூதுக்குழுவின் ஒர் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், சீனா மற்றும் அமெரிக்கா ஒன்றாக பாரிஸ் ஒப்பந்தத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

உலக வெப்பமயமாதலை குறைக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், முன்னர் இந்த பருவநிலை மாற்றத்தை வெத்து வேட்டு என்ற டிரம்ப் விமர்சித்திருந்தார்..

அவர் அதிபராக பொறுப்பேற்ற உடன் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அளித்த உறுதிமொழிகளை அவர் திரும்ப பெற்றுவிடுவாரோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்