ஆஃப்கானிஸ்தான்: அமெரிக்க ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானில் உள்ள பக்ராமில் அமைத்திருக்கும் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளம் மீது கொடூரமான தீவிரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பக்ராமில் அமைத்திருக்கும் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளம் மீது கொடூரமான தீவிரவாத தாக்குதல்

வெடிகுண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டதில் நான்கு பேர் பலியானதாகவும், சுமார் 14 பேர் காயமடைந்ததாகவும் அங்கு இயங்கி வரும் நேட்டோ தெரிவித்துள்ளது.

பணி செய்வதற்காக இன்றைய தினம் ஊழியர்கள் தளத்திற்கு வந்தபோது, தற்கொலை குண்டுதாரி ஒருவர் ஊழியரை போன்று காட்டி கொண்டதாகவும், அவர்தான் குற்றம் புரிந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் எந்தெந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்