தென் கொரிய அதிபர் பதவி விலகக்கோரி தலைநகரில் சோலில் மீண்டும் போராட்டம்

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை மீது அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென் கொரிய அதிபர் பதவி விலகக்கோரி தலைநகரில் சோலில் மீண்டும் போராட்டம்

சுமார் ஒரு மில்லியன் மக்கள் இந்த அமைதி போராட்டத்திற்கு வந்திருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அதைவிட குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்திருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

பல வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் இது மூன்றாவது போராட்டமாகும்.

ஒவ்வொரும் போராட்டமும் கடந்ததைவிட மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

அதிபரின் நெருங்கிய தோழியாகவும் நிழல் வழிகாட்டியாகவும் இருந்த சோய் சூன்-சில் உடனான தொடர்பு குறித்து போராட்டகாரர்கள் கோபமாக உள்ளனர்.

அதிபரை தவறாக வழிகாட்டியதற்காக சோய் தற்போது தடுப்புக்காவலில் உள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்