கொலம்பிய அரசு மற்றும் ஃபார்க் அமைப்பிற்கு இடையே ஏற்படவிருக்கும் புதிய அமைதி ஒப்பந்தம்

கொலம்பிய அரசு மற்றும் இடது சாரி கிளர்ச்சியாளர்களான ஃபார்க்கும் இணைந்து, சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய மாற்றங்களை உள்ளடக்கிய புதிய அமைதி ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption செம்படம்பர் மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் போது

முன்னதாக செம்படம்பர் மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம், கிளர்ச்சியாளர்கள் மீது அதிக கருணை காட்டுவதாக உள்ளது என கூறி, கடந்த மாதத்தில், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றில் மக்கள் அதனை நிராகரித்தனர்.

க்யூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டவர்கள், இந்த புதிய ஒப்பந்தத்திற்கு மற்றுமொரு வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா அல்லது கொலம்பியாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பதை தெளிவாக கூறவில்லை என போக்காட்டாவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக புதிய விதிமுறைகளுக்கு தாங்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பதிவி காலம் முடியவிருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, இந்த புதிய ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார்.