500 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பரிதவிக்கும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரூபாய் நோட்டுகளை மாற்ற தொடர்ந்து பரிதவிக்கும் மக்கள்

இந்தியாவில் கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து, அந்த நோட்டுக்களை மாற்றவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் மக்கள் பரிதவித்து வருகின்றனர்;

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர் பல ஏடிஎம் மையங்கள் சரியாக இயங்காததால் குழப்பங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

இந்த மாற்றம் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது; குறிப்பாக சில்லறை வணிகர்களை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிலரிடம் கேட்டார் பிபிசி தமிழோசை செய்தியாளர் ஜெயகுமார்.