மொசூல் அருகே பழங்கால நகரை ஐ.எஸ் குழுவினரிடமிருந்த மீண்டும் கைப்பற்றிய இராக் ராணுவம்

மொசூலின் தென்கிழக்கில் உள்ள பழங்கால நகரமான நிம்ரூட், இரு ஆண்டுகளுக்குமுன் ஐ.எஸ் குழுவினர் வசம் வீழ்ந்த நிலையில், தற்போது அதனை தனது படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஒருகாலத்தில் அசிரியன் பேரரசின் தலைநகரமாக விளங்கிய இந்த பழங்கால நகரம் கடந்த ஆண்டு ஐ.எஸ் படையினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

ஐ.எஸ் குழுவினரின் இந்த நடவடிக்கையானது போர் குற்றம் என்று கூறி ஐ.நா கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த்து.

பழங்கால நகரம் மற்றும் நவீன நகரம் என்று மொத்த நகரத்தையும், அதன் அருகே இருந்த ஒரு கிராமத்தையும் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்