புதிய நிர்வாக செயல்திட்டத்தில் பணியாற்ற 2 ஆலோசகர்களை நியமித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விரைவில் அமையவிருக்கும் நிர்வாகத்தின் செயல்திட்டத்தை செயல்படுத்த தனது இரண்டு முக்கிய ஆலோசகர்களை நியமித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

அமையவிருக்கும் புதிய நிர்வாகத்தில் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பர்

தற்போது குடியரசுக் கட்சியின் தேசிய குழுவின் தலைவரான ரைன்ஸ் பிரீபஸ், வெள்ளை மாளிகை பணியாளர்களின் புதிய தலைவராக செயல்படுவார்.

ஆனால், யுத்திகள் வகுக்கும் மூலோபாய பிரிவுத் தலைவராக ஸ்டீபன் பேனன் நியமிக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்டீபன் பேனன்

தனது வலதுசாரி கருத்துக்களால் நன்கு அறியப்பட்ட பிரைட்பார்ட் நியூஸ் எனற இணையதள நிறுவனத்தின் தலைவராக பேனன் இருந்து வந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்