இராக்கில் ஷியா நகருக்கு அருகே நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 6 பேர் பலி

இராக்கில் ஷியா நகரமான கெர்பாலா அருகே உள்ள நகரம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு தற்கொலை தாக்குதலில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆறு தற்கொலை குண்டுதாரிகள் ஏயின் அல்-டமாரை நுழைய முயற்சித்ததாகவும், ஆனால் பாதுகாப்பு படையினர் அதில் ஐந்து பேரை கொன்றுவிட்டதாகவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆறாவது குண்டுதாரி ஒரு வீட்டிற்குள் நுழைந்து தன்னை தானே வெடிக்க வைத்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

ஆனால், ஐ.எஸ் ஜிகாதிகள் குழு, இராக்கில் அடிக்கடி தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்