புடினுடன் தொலைபேசியில் உரையாடினார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் போட்டியில் வென்ற பின்னர், முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption புடினுடன் தொலைபேசியில் உரையாடினார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஒரு வலுவான மற்றும் நீடித்த உறவு நிலைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை டிரம்ப் வெளிப்படுத்தியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமத்துவம் மற்றும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாத தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை சீராக்க டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டதாக கிரம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட தேவையான ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்தும் இந்த இரு தலைவர்களும் விவாதித்ததாக கிரம்ளின் மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையாலும், கடந்த 2014-ஆம் ஆண்டில், கிரைமியா பகுதியை தனது நாட்டுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டதாலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கிரைமியா பகுதியை தனது நாட்டுடன் ரஷ்யா இணைத்துக் கொண்ட பிறகு, ரஷ்யா மீது அமெரிக்கா சில பொருளாதார தடைகளை விதித்தது.

தொடர்புடைய தலைப்புகள்