ஜகார்த்தா ஆளுநர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு

தெய்வநிந்தனை நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை ஒன்றில் இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவின் ஆளுநரை சந்தேக நபராக அந்நாட்டு போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜகார்த்தா ஆளுநர் பூரனாமா

சீன கிறிஸ்துவ இனத்தை சேர்ந்த ஜகார்த்தா ஆளுநர் பஸுகி சாஹியா அ பூரனாமா மீது, இஸ்லாமிய புனித நூலான குரானை அவமதித்ததாக குற்றம்சாட்டி சில முஸ்லீம் குழுக்கள் இந்த மாத துவக்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்ச்சையை உருவாக்கிய தனது கருத்துக்களுக்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அஹோக் என்றழைக்கப்படும் ஆளுநர் இந்த விசாரணை முடிவையும் வரை இந்தோனேசியாவை விட்டு செல்ல அனுமதிக்கப் படமாட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்