இன்று மாலை டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள ஜப்பான் பிரதமர்

இன்று (வியாழக்கிழமை) மாலை நியூ யார்க்கில், புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு முதல் வெளிநாட்டு தலைவராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்து பேச்சுவாத்தை நடத்த உள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வளர்க்கவும், வளம் மற்றும் சமாதானம் ஆகியவற்றை நோக்கி பயணப்படுவதையும் தான் டிரம்புடனான சந்திப்பில் எதிர்நோக்குவதாகவும் அபே தெரிவித்தார்.

எதிர்பாராத அதிபர் தேர்தல் வெற்றிக்கு பிறகு, தனது வழக்கமான சொல்லாடல்களை டிரம்ப் குறைத்து கொண்டாலும், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவின் பிரதான ஆசிய கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் எண்ணற்ற இழிவான கருத்துக்களை வெளியிட்டார்.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பரிந்துரைத்ததின் மூலம் அமெரிக்கா மற்றும் இந்நாடுகளிடையே டிரம்ப் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்