துனிஷிய சர்வாதிகார ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேரலை ஒளிப்பரப்பு

துனிஷியாவில் பல தசாப்தங்களாக நடந்த சர்வாதிகார ஆட்சியின் துஷ்பிரயோக மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் குறைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption துனிஷிய சர்வாதிகார ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேரலை ஒளிப்பரப்பு

துனிஷிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் கண்ணியம் என்ற ஆணையம் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஏற்பாடு செய்த இந்த மக்கள் குறையறியும் நிகழ்ச்சி, கடந்த கால சர்வாதிகார ஆட்சியின் தவறுகளால் மக்களிடையே ஏற்பட்ட பதற்றத்தை தளர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து, சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவு உள்பட 62,000-க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் இந்த ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உண்மை மற்றும் கண்ணியம் என்ற ஆணையத்தின் தலைவர்

கடந்த 2011-ஆம் ஆண்டு துனிஷிய அதிபர் ஷைன் அல் அபிடைன் பென் அலி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, அந்நாடு ஒரு ஜனநாயக நாடாக மாறியுள்ளது.