உயரத்தால் வந்த சிக்கல்

உயரமாக இருப்பதில் சில சமயம் சிக்கல்கள் ஏற்படலாம்.

அப்படியான சிக்கல் தான்சானியாவிலுள்ள பராக்கா எலியாஸுக்கு ஏற்பட்டுள்ளது.

லியாஸ் 7அடி 4 அங்குலம் உயரம் இருப்பதால் அவருக்கு மருத்துவம் செய்ய இயலாது என அங்குள்ள மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

Image caption பராக்கா எலியாஸ்

கீழேவிழுந்த அவருக்கு இடுப்பெலும்பு முறிவு ஏற்பட்டதால் அதை மாற்றவேண்டியத் தேவை எழுந்தது.

ஆனால் நாட்டின் வர்த்தகத் தலைநகர் டார் எஸ் சலாமிலுள்ள மருத்துவர்கள் அவரது உயரத்துக்கு மருத்துவமனையில் படுக்கை வசதியில்லை எனக் கூறிவிட்டனர்.

அதுமட்டுமல்ல அவரது உயரத்துக்கு ஏற்றவகையில் எக்ஸ்ரே படம் எடுக்கும் கருவியும் மருத்துவமனைகளில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

மேற்குலக நாடுகளை ஒப்பிடும்போது தான்சானியாவில் சுகாதார வசதிகள் மிகவும் குறைவு.

தான்சானியவின் மிகவும் உயரமான மனிதர் என அறியப்படும் எலிசாவை வெளிநாட்டுக்கு அனுப்பி மருத்துவம் செய்ய முடியுமா என்பது குறித்து இப்போது மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

பலர் தனது உயரம் குறித்து ஆச்சர்யம் கொண்டாலும், இது "இயல்பான ஒன்று" என அவர் கூறுகிறார்.

இது மரபுரீதியானது என அவரது பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.