டிரம்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தீர்வுத்தொகையை தர டிரம்ப் உறுதி

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், பல மில்லியன் டாலர் தீர்வுத் தொகை கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்த பணத்தை தருவதாக ஒப்பு கொண்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த வழக்கு அவரை விடாப்பிடியாகச் சிரமப்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்ப்பின் இந்த முடிவை அதிர்ச்சி தரும் பின்வாங்கல் என நியூயார்க்கின் அரசு வழக்கறிஞர் விவரித்துள்ளார்.

டிரம்ப்புக்கு சொந்தமான, தற்போது செயல்பாட்டில் இல்லாத, சொத்து முதலீடு வணிகக் கல்வி நிறுவனமான டிரம்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அவர் மீது மோசடி வழக்கு ஒன்றை தொடுத்தனர்.

அவர் தீர்வுத்தொகையான 25 மில்லியன் டாலர் பணத்தை செலுத்தப் போவதில்லை என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். ஆனால் தற்போது, அவர் அந்தத் தொகையை தர ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அவர் தனது தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கிவிட்டு நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைப் பற்றி கவனம் செலுத்துவதற்கு விருப்பத்துடன் உள்ளதைக் காட்டுகிறது என டிரம்ப்பின் வழக்கறிஞர் கூறினார்.