வர்த்தகத்தில் பாதுகாப்பு கவசத்தை தடுக்க வலியுறுத்தும் எபெக் உச்சி மாநாடு

சுதந்திரமான வர்த்தகத்திற்கு ஆதரவு அளித்து செயல்படுத்தவும், வளர்ந்து வருகின்ற வர்த்தக பாதுகாப்புவாதத்தை தோல்வியடைய செய்யவும், பசிபிக் பிராந்திய உச்சி மாநாட்டில் குழுமியிருக்கும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க அதிபராக பாராக் ஒபாமா கலந்து கொள்ளும் கடைசி மாநாடு, ஏபெக் எனப்படும் இந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடுதான்.

பிராந்திய வர்த்தக ஒப்பந்தம் மற்றும் டிரான்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் வர்த்தக பாதுகாப்புவாதம் வளர்ந்து வருகிறது. இது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டையொட்டி பேசிய பெரு நாட்டு அதிபர் பெட்ரோ பௌலோ கூச்சீன்ஸ்கி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் பிரதமர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் விலகிக் கொண்டால், இந்த பிராந்திய தலைவர்கள் சீனா ஆதரவளிக்கும் உடன்பாடு உள்பட பிற வர்த்தக உடன்பாடுகளில் கவனத்தை செலுத்தலாம் என்று லிமாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.