துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைக் பென்ஸை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்புக் கோருகிறார் டிரம்பர்

வெள்ளிக்கிழமை இரவு துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைக் பென்ஸிற்கு எதிராக நடந்துக் கொண்ட நியூயார்க்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள், மன்னிப்பு கோர வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ்

அமெரிக்காவை தோற்றுவித்தவர்களில் ஒருவராக கருதப்படும் அலெக்சாண்டர் ஹாமில்டனின் வாழ்க்கையை தழுவி நிகழ்த்தப்படும் ஹாமில்டன் என்னும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கும் போதும் பார்வையாளர்கள் பென்ஸிற்கு எதிராக அதிருப்தி கோஷங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு வேறுபட்ட நிறத்தினர்களுக்கு, வேறு மத கோட்பாட்டாளர்களுக்கு மற்றும் வேற்று பாலினத்தவர்களுக்கு டிரம்பின் நிர்வாகம் பாதுகாப்பளிக்க தவறலாம் என்று கவலை வெளியிட்டு நிகழ்ச்சியின் இறுதியில் பென்ஸை நோக்கி கடிதம் ஒன்று வாசிகக்ப்பட்டது.

நல்ல மனிதர் ஒருவரிடம் அந்த நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள் கடுமையாக நடந்துக் கொண்டன என டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.