நான்காவது வாரமாக தொடரும் தென் கொரிய அதிபருக்கு எதிரான போராட்டம்

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹெ பதவி விலக வேண்டும் என்று கோரி, தொடர்ந்து நான்காவது வாரமாக சோலின் தெருக்களில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சனிக்கிழமை சிறு குழுவினர் சோலில் கூடி அதிபருக்கு ஆதரவு தெரிவித்தனர்

பல லட்சக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக இதனை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். .

தன்னுடைய நீண்ட கால தோழி சோய் சூன் சில்-ஐ அரசியலில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்த அதிபர் அனுமதித்ததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகவும் சினம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அதிபரின் தோழி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்

அதிபர் பதவி விலக வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை இதுவரை சமாளித்திருக்கும் அதிபர் பார்க் குன் ஹெ, இன்னும் ஆட்சியை தொடர்ந்து வருகிறார்.

சனிக்கிழமை சிறு குழுவினர் சோலில் கூடி அதிபருக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்