அமெரிக்க வெளியுறவு செயலாளராக மிட் ரோம்னி நியமனம்?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னை மிகவும் தீவிரமாக விமர்சனம் செய்தவர்களில் ஒருவரான மிட் ரோம்னியை சந்தித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மிட் ரோம்னி - டிரம்ப் (கோப்புப் படம்)

இந்த சந்திப்பினால், மிட் ரோம்னி அமெரிக்க அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக நியமனம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பை ஒரு மோசடி பேர்வழி என்று ரோம்னி விவரித்திருந்தார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு, மிகவும் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை, ஒரு முழுமையான பேச்சுவார்த்தையாக அமைந்ததாக ரோம்னி தெரிவித்தார்.

தனது புதிய நிர்வாகத்தில் பணியாற்ற டிரம்ப் செய்துள்ள இதுவரை செய்த பல நியமனங்களைச் செய்துள்ளார். அவற்றில் பல சர்ச்சைக்குரியவையாக அமைந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்