மியான்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை, ஒருவர் பலி

மியான்மார் - சீன எல்லைக்கு அருகில்லுள்ள பகுதியில் கிளர்ச்சி குழுக்களோடு மியான்மார் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP

இதனால், அப்பகுதியிலுள்ள குடிமக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

மியான்மார் ராணுவத்திற்கும், முக்கிய கிளர்ச்சி குழுவான, தாயாங் தேசிய விடுதலை படையோடு தொடர்புடைய ஆயுதப்படைக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒரு டஜன் பேர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இன கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று, காவல்துறையின் சோதனை சாவடி ஒன்றை தாக்கியபோது, சண்டை தொடங்கியது என்று பிபிசியின் மியான்மார் சேவை தெரிவிக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்