சிரியா: சின்னாபின்னமாகும் அலெப்போ

சிரியாவின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நகரத்தின் மேற்கே அரசின் கட்டுப்பாட்டு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வீசிய ஷெல் குண்டு தாக்குதலால் 7 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அலெப்போவிலிருந்து தகவல்கள் வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை SANA

கிளர்ச்சியாளர்களின் ஷெல் குண்டுவீச்சு அலெப்போவின் மேற்கில் இருக்கும் ஃபர்கான் மாவட்டத்திலுள்ள பள்ளியை தாக்கியதில் இந்த 7 குழுந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் அரசு ஊடகம் கூறியிருக்கிறது,

குளோரின் வாயு நிரம்பிய பேரல் குண்டுகள் வீசப்பட்ட பிறகு ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மூச்சி திணறி உயிரிழந்துள்ளதாக அலெப்போவின் கிழக்கிலுள்ள செயற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

ஐக்கிய நாடுகள் அவையின் சிரியாவுக்கான சிறப்பு தூதரோடு நடைபெற்றதொரு கூட்டத்தில், அலெப்போவின் கிழக்குப் பகுதியில் தன்னாட்சி நிர்வாகம் அமைக்கும் முன்மொழிவை சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வலீடு அல் மோலெம் நிராகரித்து விட்டார்.

தொடர்புடைய தலைப்புகள்