பிரான்ஸ் குடியரசு கட்சியின் ஆரம்பகட்ட தேர்தலில் சர்கோசி தோல்வி

பிரான்ஸ் மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மூன்றாவது இடத்தையே பிடித்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption "தோல்வியடைந்ததால் எவ்வித கசப்புணர்வும் இல்லை. கவலையும் இல்லை. எனது நாட்டிற்கு நல்லதையே விரும்புகிறேன்" - சர்கோசி

இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட சர்கோசி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் முதலாவதாக வந்த பிரான்சுவா ஃபியோங்கிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

மற்றுமொரு முன்னாள் பிரதமரான அலாங் யுபே இரண்டாவதாக வந்துள்ளார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது சுற்று தேர்தலில் இவர்கள் இருவரும் மோத இருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சந்தை சீர்திருத்தத்தை முன்வைக்கும் முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபியோங் முன்னிலையில் உள்ளார்

குடியரசு கட்சியின் ஆரம்பகட்ட தேர்தலில் வெற்றிபெறுபவர், பிரான்ஸின் அதிபர் வேட்பாளராக, தீவிர வலது சாரி தலைவர் மர்ரீன் ல பென்னோடு அதிபர் தேர்தலில் மோதலாம்.

பிரான்ஸை ஆளும் சோசலிச கட்சியினர் பிரபலம் இழந்து, பிரிந்து காணப்படுவதால், ஏப்ரல் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் இடது சாரி அதிபர் வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.

மே மாதம் நடைபெறும் இரண்டாவது சுற்றில் மத்திய வலது சாரி அதிபர் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption முன்னாள் பிரதமரான அலாங் யுபே இரண்டாவது இடம்

"தோல்வியடைந்ததால் எவ்வித கசப்புணர்வும் இல்லை. கவலையும் இல்லை. எனது நாட்டிற்கு நல்லதையே விரும்புகிறேன்" என்ற 61 வயதான சர்கோசி உரையாற்றிய போது தெரிவித்தார்.

யுபேயின் கொள்கைகளை விட 62 வயதான ஃபியோங்கின் "அரசியல் கொள்கைகள்" தன்னுடைய கொள்கைகளுக்கு நெருக்கமாக இருப்பதால் அதரவு அளிப்பதாக சர்கோசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சர்கோசியின் அதிபர் ஆட்சியின் கடைசியில் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஃபியோங் பிரதமராக பணியாற்றினார்.

தொடர்புடைய தலைப்புகள்